
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட ப.உ.ச நகர் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளாக குப்பைகள் கொட்டப்பட்டு நீர், காற்று மாசு ஏற்பட்டு பொதுமக்கள் பல்வேறு நோய்க்கும் உள்ளாகி வந்தனர். இதனை சட்டமன்றத்தில் அரசின் கவனதிற்கு பலமுறை எடுத்து சென்ற திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, சுமார் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய்கான நிதி பெற்று மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரிக்கும் கிடங்கினை கட்டுவதற்கான வாய்ப்பை பெற்று தந்தார்.
அந்த பணிகள் கடந்த 8 மாதமாக மந்த நிலையில் நடைபெறுவதை அறிந்து குப்பை கிடங்கு பகுதிக்கு நேரடியாக சென்று பார்வையிட்டு பணிகள் உடனடியாக தொடங்க வேண்டும் என்று ஜீலை 20ந்தேதி மதியம் குப்பை கிடங்கின் மீது அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
இதனை அறிந்த நகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் அந்த இடத்திற்கு வந்து ஆகஸ்டு மாதம் 30ம் பணிகள் முடிக்கப்பட்டு குப்பைகிடங்கு தூய்மை படுத்தப்படும் என அரசின் சார்பில் உறுதியளித்ததை தொடர்ந்து தர்ணா போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.