ஈரோடு, பெருந்துறையில் இன்று தி.மு.க., மண்டல மாநாடு கொடியேற்றத்துடன் துவங்கியது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே, சரளை பகுதியில், தி.மு.க., சார்பில், இன்றும், நாளையும் மண்டல மாநாடு நடைபெறுகிறது. அதன் தொடக்கமாக இன்று காலை திமுக எம்.எல்.ஏ கோவி.செழியன், 100 அடி கம்பத்தில் கழக கொடியை ஏற்றினார். தொடக்க நாள் நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின், கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திமுக செயல் தலைவராக, மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் நடக்கும் முதல் மாநாடு இது. மாநாட்டுக்காக, 1.50 லட்சம் சதுர அடி பந்தல், ஒரு லட்சம் நாற்காலிகள், கோட்டை போன்ற முகப்பு தோற்றம், புகைப்பட கண்காட்சி அரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மு.க.ஸ்டாலின் தலைமையில், 100 ஜோடிகளுக்கு, இலவச சுயமரியாதை திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது.