Skip to main content

நடிகைக்கு டேட்டிங் ரேட்! வாட்ஸ்-அப் அழைப்பால் வந்த வினை!

Published on 12/07/2018 | Edited on 12/07/2018
jaya

 

ஆரம்ப காலத்தில்,  நாடகமோ, சினிமாவோ நடிப்பதற்கு பெண்கள் வரத்தயங்கினார்கள்.  அதனால், சிவாஜி கணேசன் போன்ற  ஆண் நடிகர்களே ஸ்த்ரீ பார்ட் வேடம் போட்டனர். ஏனென்றால், கலைஞர்களைக் கூத்தாடிகள் என்று இளக்கமாகப் பேசியது உலகம். அதனாலேயே, தங்களின் எதிர்காலம் என்னாகுமோ என்ற பயத்தில் பெண்கள் பலரும் நடிப்பதற்கு முன்வரவில்லை. காலம் எவ்வளவோ மாறிவிட்டது. ஆனாலும், நடிகைகள் என்றால் அலட்சியமாக நினைப்பவர்கள் இப்போதும் இருக்கின்றனர். அப்படி நினைத்து, வாட்ஸ்-அப் மூலம் நடிகை ஜெயலட்சுமிக்கு  தொல்லை கொடுத்த, விருகம்பாக்கத்தைச் சேர்ந்த துணை நடிகை ஏஜன்டுகளான முருகப்பெருமாள், கவியரசு ஆகியோர் கைதாகியிருக்கின்றனர்.    

 

jaya

 

சரி, விவகாரத்துக்கு வருவோம்! சினிமா சம்பந்தப்பட்டவர்களில் வெகுசிலர், இன்னொருவிதத்தில் சம்பாதிக்கவும் செய்கின்றனர். அவர்களுக்கென்று புரோக்கர்கள் உள்ளனர். இவர்களின் வேலையே, துணை நடிகைகளின் ஆல்பத்தைக் காட்டி, இவ்வளவு ரேட் என்று பேசி,  வாடிக்கையாளர்களை இழுப்பதுதான். அப்போது சிலர், ஆல்பத்தில் இடம் பெறாத குறிப்பிட்ட நடிகை வேண்டும் என்று அடம் பிடிப்பர். புரோக்கர்களும் வேறுவழியின்றி, சம்பந்தப்பட்ட நடிகையை, உரியவர்கள் மூலம் அணுகி, ஏற்பாடு செய்வர். இந்த இடத்தில்தான் சிக்கல் இருக்கிறது. பெரிய நடிகையோ, துணை நடிகையோ,   நடிப்பைத் தவிர வேறு அட்ஜஸ்ட்மென்டுகளுக்கு வளைந்து கொடுக்காத,  தரமான நடிகைகள் பலர் உண்டு. அவர்களிடம் போய், இந்த புரோக்கர்கள் தலையைச் சொரிந்து நின்றால், விரட்டியடித்து விடுவார்கள். இந்த நடைமுறையெல்லாம் இப்போது மாறிவிட்டது. இது வாட்ஸப் காலமாயிற்றே! ‘வர்றியாம்மா!’ என்று வாட்ஸப்பில் நூல் விட்டுப் பார்ப்போம். படிந்தால், ரேட் பேசுவோம். இல்லையென்றால், விட்டுவிடுவோம் என்று, எந்த ஒரு துணை நடிகைக்கும் சாதாரணமாக மெசேஜ் அனுப்பி விடுகிறார்கள். பலரும் இத்தகைய அழைப்புக்களைக் கண்டுகொள்வதும் இல்லை; வெளியில் சொல்வதும் இல்லை. 

 

j2

 

சினிமா மற்றும் டிவி சீரியல்களில் நடித்துவரும் ஜெயலட்சுமிக்கும் புரோக்கர்களிடமிருந்து வாட்ஸப் அழைப்பு போயிருக்கிறது.  ‘தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் கைவசம் இருக்கிறார்கள். டேட்டிங் சென்றால் ரூ.30 ஆயிரத்திலிருந்து ரூ.3 லட்சம் வரை கிடைக்கும்.’ என்று வாட்ஸப் மூலம் தெரிவித்திருக்கிறார்கள் முருகப்பெருமாளும், கவியரசும். அறிமுகம் இல்லாதவர்களிடமிருந்து, தொடர்ந்து  வாட்ஸப் மெசேஜ் வர, பொறுமை இழந்த ஜெயலட்சுமி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். விபச்சாரதடுப்பு பிரிவு போலீசார் இருவரையும் கைது செய்திருக்கின்றனர். 

 

பரவாயில்லையே! துணிச்சலோடு போலீஸிடம் புகார் அளித்திருக்கிறாரே! யார் இந்த நடிகை? என்ற விபரங்களை சேகரித்தோம். கேரளாவைச் சேர்ந்த ஜெயலட்சுமி, தமிழில் கோரிப்பாளையம், அப்பா, விசாரணை, பிரிவோம் சந்திப்போம், வேட்டைக்காரன் போன்ற பல படங்களில் நடித்தவர். சின்னத்திரை சீரியலான தமிழ் கடவுள் முருகனில் இவர் ஏற்றிருக்கும் வேடம் மகாலட்சுமி. 

 

மகாலட்சுமி வேடத்தில் நடிப்பவர் பணத்துக்கு மயங்குவாரா? மட்டரகமான அழைப்பு விடுக்கலாமா?   கொடுமைதான்!

சார்ந்த செய்திகள்

Next Story

நடிகையும் பாஜக பிரமுகருமான ஜெயலட்சுமி கைது

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
actress and bjp member jayalakshmi arrest

பாடலாசிரியரும் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகியுமான சினேகன், தான் நடத்தி வருகிற ‘சினேகம்’ என்ற அறக்கட்டளையின் பெயரில் சமூக வலைத்தளத்தில் போலிக் கணக்குகள் தொடங்கி பணம் வசூலித்து வருவதாக நடிகையும் பாஜக பிரமுகருமான ஜெயலட்சுமியின் மீது சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இதன் பிறகு அதே பெயரில் அறக்கட்டளை நடத்தி வரும் ஜெயலட்சுமி, பொதுவெளியில் தன் மீது அவதூறு பேசியுள்ளதாக சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். 

பின்பு இருவரையும் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு அழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். ஆனால், சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை ஜெயலட்சுமி மீண்டும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும் இது தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்திலும் ஜெயலட்சுமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அவதூறு பரப்பும் வகையில் பேசிய பாடலாசிரியர் சினேகன் மீது வழக்குப்பதிவு செய்ய எழும்பூர் மேஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார். அதனடிப்படையில் திருமங்கலம் காவல்துறையினர் சினேகன் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சினேகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, திருமங்கலம் போலீஸார் சினேகன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டது. 

இதனிடையே சினேகன், தான் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டி எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, நடிகையும் பாஜக மாநில துணைத் தலைவியுமான ஜெயலட்சுமி மீது வழக்குப் பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் ஜெயலட்சுமி மீது சென்னை திருமங்கலம் போலீசார் சட்டப் பிரிவு 420 மற்றும் 465 என 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தனர். 

இந்த நிலையில், இன்று சென்னை திருமங்கலம் பகுதியில் உள்ள ஜெயலட்சுமி வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர். 3 மணி நேரம் இந்த சோதனை நடைபெற்ற நிலையில், தற்போது ஜெயலட்சுமியை போலீஸார் கைது செய்துள்ளனர். 

Next Story

சினேகன் மீதான வழக்கு ரத்து

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
snehan jayalakshmi issue

பாடலாசிரியரும் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகியுமான சினேகன், தான் நடத்தி வருகிற ‘சினேகம்’ என்ற அறக்கட்டளையின் பெயரில் சமூக வலைத்தளத்தில் போலிக் கணக்குகள் தொடங்கி பணம் வசூலித்து வருவதாக நடிகையும் பாஜக பிரமுகருமான ஜெயலட்சுமியின் மீது சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இதன் பிறகு அதே பெயரில் அறக்கட்டளை நடத்தி வரும் ஜெயலட்சுமி, பொதுவெளியில் தன் மீது அவதூறு பேசியுள்ளதாக சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். 

பின்பு இருவரையும் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு அழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். ஆனால், சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை ஜெயலட்சுமி மீண்டும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும் இது தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்திலும் ஜெயலட்சுமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது அவதூறு பரப்பும் வகையில் பேசிய பாடலாசிரியர் சினேகன் மீது வழக்குப்பதிவு செய்ய எழும்பூர் மேஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார். அதனடிப்படையில் திருமங்கலம் காவல்துறையினர் சினேகன் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சினேகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவானது நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சினேகன் தரப்பு, ஜெயலட்சுமி மீது தான் கொடுத்த புகாருக்கு பதில் புகாராக, ஜெயலட்சுமி தன் மீது பொய் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் தன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சினேகன் மீது திருமங்கலம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார்.