தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் நீங்கலாக கிராம அளவில் ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகளுக்கு மட்டும் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்க இருக்கிறது.
கடந்த 9-ந் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. மனு தாக்கல் செய்ய 16-ந் தேதி கடைசி நாள் ஆகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 17-ந் தேதி நடைபெறும். போட்டியில் இருந்து விலக விரும்புவோர் தங்கள் மனுக்களை 19-ந் தேதி திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். தேர்தல் நாள் அன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணியுடன் முடிவடையும். வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ந் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்ததையடுத்து தேர்தலில் போட்டியிட விரும்பியவர்கள் மனுதாக்கல் செய்து வந்தனர்.
இந்தநிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக வேட்பாளர்கள் போட்டியிடும் மாவட்டங்களை தற்போது திமுக தலைமை அறிவித்துள்ளது. திருவண்ணாமலை வடக்கு, தெற்கு, திருச்சி வடக்கு, தெற்கு, கரூர், சேலம் மத்திய, மேற்கு மாவட்டங்களில் திமுக போட்டியிடுகிறது.
கோவை தெற்கு, நீலகிரி, மதுரை வடக்கு, தெற்கு மாவட்டங்களிலும் திமுக போட்டியிடுகிறது. தூத்துக்குடி வடக்கு, தெற்கு, கன்னியாகுமரி கிழக்கு, திருவள்ளூர் வடக்கு, கடலூர் கிழக்கு, மேற்கு, தஞ்சை வடக்கு, தெற்கு, நாகை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, கோவை வடக்கு, திருப்பூர் வடக்கு, தெற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு, விருதுநகர் வடக்கு ஆகிய இடங்களில் திமுக போட்டியிடுகிறது.
மற்ற மாவட்டங்களில் போட்டியிடுவது குறித்து மற்ற தோழமை கட்சிகளுடன் திமுக ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.