
தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாகத் தீவிர முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசியப் பொருட்களுக்கான கடைகள் மூடப்பட்ட நிலையில், அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு செல்லும் லாரிகளை தடுக்காமல் அனுமதி வழங்க வேண்டும் என லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் எழுதியுள்ள கோரிக்கை கடிதத்தில், ''உடுமலைப்பேட்டை, தாராபுரம், திருச்சி நெடுஞ்சாலை உள்ளிட்டவற்றில் அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு செல்லும் லாரிகளை போலீஸார் தடுக்கின்றனர். லாரிகள் இயக்கம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை என போலீஸார் அனுமதி மறுப்பதாகக் கூறுகின்றனர். சில இடங்களில் போலீஸார் தாக்கியதாகக் கூறி ஓட்டுநர்கள் பணிக்கு வரத் தயங்குகின்றனர்'' என அந்த புகார் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.