Skip to main content

தி.மு.க.வுடன் எடப்பாடி கூட்டணி... டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு

Published on 26/08/2018 | Edited on 26/08/2018
t

 

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இன்று டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க. கட்யின் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய எம்.எல்.ஏ. தங்க .தமிழ்செல்வன்,  வருகிற 31ம் தேதி வரும் 18 எம்.எல் ஏ.க்களின் தீர்ப்பு நல்ல தீர்ப்பாக அமையும். அதே போல் இரண்டு எம்.எல்.ஏ. தொகுதிகளின் இடைத்தேர்தலில் உண்மையான அ.தி.மு.க.வான அ.ம.மு.க.தான் வெற்றி பெறும் என்றார். 

 

t

 

தொடர்ந்து பேசிய டி.டி.வி. தினகரன்,   தற்போது சினிமா பீல்டில் நகைச்சுவை நடிகர் வடிவேல் இல்லை. அந்த இடத்தை எடப்பாடியின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் செய்கிறார்கள். தி.மு.க. வுடன் காங்கிரஸ் கூட்டணியில் உள்ளதோ இல்லையோ ஆனால் தி மு.க.வுடன் எடப்பாடி கூட்டணியில் உள்ளார் என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட டி.டி.வி. தினகரன்..! (படங்கள்)

Published on 19/03/2021 | Edited on 19/03/2021

 

2021ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு குறைந்த நாட்களே இருக்கின்ற நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமமுக கட்சித் தலைவர் டி.டி.வி தினகரன், அவரது வேட்பாளர்களை ஆதரித்து தொடர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் வேளச்சேரி தொகுதியின் அமமுக  வேட்பாளர் சந்திர போஸை ஆதரித்து டி.டி.வி. தினகரன் வேளச்சேரி காந்தி சாலையில் பிரச்சாரம் செய்தார். 

 

 

Next Story

சசிகலா தமிழகம் வருகை... அமமுகவினர் உற்சாக வரவேற்பு!! (படங்கள்)

Published on 08/02/2021 | Edited on 08/02/2021

 

 

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிந்து பெங்களூருவிலிருந்து தமிழகம் வரும் சசிகலாவிற்கு வழிநெடுகிலும் 57 இடங்களில் வரவேற்பு கொடுக்க அமமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர். கர்நாடகா - தமிழக எல்லையான ஜூஜூவாடியில் மேளதாளம் முழங்க 5 ஆயிரம் பேர் சசிகலாவை வரவேற்றனர்.

 

அதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் வழியாக சென்னை அழைத்து வரப்படுகிறார் சசிகலா. சென்னை எல்லையான செம்பரம்பாக்கம் தொடங்கி நசரத்பேட்டை, குமணன்சாவடி, போரூர், கிண்டி கத்திப்பாரா என தியாகராய நகர் வரை 32 இடங்களில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. சசிகலாவை வரவேற்று சென்னையின் பெரும்பாலான இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.