நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
திமுக தான் போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை நேற்று அறிவித்த நிலையில், அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி தற்போது வெளியிட்டார். இந்நிலையில் 18 இடங்களில் திமுக - அதிமுக நேரடியாக களத்தில் மோதவுள்ளது.
1.தென்சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன்(திமுக) - ஜெயவர்தன்(அதிமுக)
2.வடசென்னை - கலாநிதி வீராசாமி (திமுக) - ராயபுரம் மனோ (அதிமுக),
3.சேலம் - டி.எம். செல்வகணபதி (திமுக) - விக்னேஷ் (அதிமுக)
4.ஈரோடு - பிரகாஷ்(திமுக) - ஆற்றல் அசோக்குமார் (அதிமுக)
5.அரக்கோணம் - ஜெகத்ரட்சகன் (திமுக) - ஏ.எல்.விஜயன்(அதிமுக),
6.ஆரணி - எம்.எஸ். தரணிவேந்தன்(திமுக) - கஜேந்திரன்(அதிமுக)
7.காஞ்சிபுரம் (தனி) - செல்வம் (திமுக) - ராஜசேகர்(அதிமுக),
8.தேனி - தங்க தமிழ்ச்செல்வன்(திமுக) - நாராயணசாமி(அதிமுக)
9.நீலகிரி - ஆ. ராசா(திமுக) - லோகேஷ் தமிழ்ச்செல்வன்(அதிமுக)
10.வேலூர் - கதிர் ஆனந்த் (திமுக) - பசுபதி (அதிமுக)
11.கோவை - கணபதி ராஜ்குமார் (திமுக) - சிங்கை ராமச்சந்திரன் (அதிமுக)
12.தருமபுரி - ஆ.மணி (திமுக) - அசோகன்(அதிமுக)
13.கள்ளக்குறிச்சி - மலையரசன்(திமுக) - குமரகுரு (அதிமுக)
14.திருவண்ணாமலை - சி.என்.அண்ணாதுரை(திமுக) - கலியபெருமாள்(அதிமுக)
15.பெரம்பலூர் - அருண் நேரு(திமுக) - சந்திரமோகன் (அதிமுக)
16.தூத்துக்குடி - கனிமொழி(திமுக) - சிவசாமி வேலுசாமி (அதிமுக)
17.ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு (திமுக) - பிரேம்குமார் (அதிமுக)
18.பொள்ளாச்சி- கே.ஈஸ்வரசாமி(திமுக) - கார்த்திகேயன்(அதிமுக)