அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து கடந்த பிப்ரவரி 16-ந்தேதி சென்னை திரும்பினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். பொதுக்கூட்டம், விழாக்களை தவிர்த்து வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்த அவர், முக்கிய பிரமுகர்களை மட்டும் சந்தித்தார். மக்களவை தேர்தல் கூட்டணி கட்சி தலைவர்களையும் தனது வீட்டிலேயே சந்தித்து பேசினார். கூட்டணி பேச்சுவார்த்தை ஒப்பந்தத்திற்கு சென்னையில் ஓட்டலுக்கு சென்றவர், அங்கே நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் எதுவும் பேசவில்லை.

பிரச்சாரத்திற்கு அவர் வருவார் என்று சொல்லப்பட்ட நிலையில், பிரச்சாரத்தின் இறுதி நாளுக்கு முந்தைய நாள் சென்னையில் மட்டும் 3 தொகுதிகளில் வேனில் இருந்தபடியே சில வார்த்தைகள் மட்டும் பேசி பிரச்சாரம் செய்தார்.
இந்நிலையில் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்கா செல்கிறார். விஜயாந்துடன் பிரேமலதாவும் செல்லவேண்டியிருப்பதால், 4 தொகுதிகள் இடைத் தேர்தல் பிரச்சாரத்தை தவிர்க்கலாமா? அல்லது அமெரிக்கா செல்வதை தள்ளிப் போடலாமா என பிரேமலதா ஆலோசித்து வருவதாக தகவல்.