தீபாவளியன்று காலை 6 முதல் 7 மணிவரையிலும், இரவு 7 மணிமுதல் 8 மணிவரை என 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து தமிழக அரசு அந்த இரண்டு மணிநேரத்தை இவ்வாறு ஒதுக்கி அரசாணை பிறப்பித்தது. இன்று தீபாவளி காலை விதியைமீறி பட்டாசு வெடித்ததாக நெல்லை மாவட்டத்தில் 27பேரை போலிஸார் பிடித்தனர். அவர்களில் 6 பேர் சிறுவர்கள். மற்றவர்கள் அவர்களது பெற்றோர்கள் இவர்களில் சிலபேர்களை முறைப்படி பட்டாசு வெடிக்கவேண்டுமென்று போலிஸார் அறிவுறுத்தி அனுப்பிவிட்டனர். இதைத்தவிர சேரன்மகாதேவியில் 6பேர் மீதும், தென்காசியில் 3 பேர் மீதும் தொடர்புடைய காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்களின்மீது பிரிவு 188 தடையாணையை மீறியதாகவும், 195ன் படி அரசாணையை மீறியதாகவும், 291ன்படி பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாகவும் மூன்று பிரிவின்கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் காவல்நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.