ஜெ.மறைவுக்கு பிறகு அதிமுகவில் உடைப்பு ஏற்பட்டு சசிகலா, தினகரன், திவாகரன், பாஸ்கரன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு பெயர்களில் கட்சி தொடங்க பரபரப்பு ஏற்பட்டிருந்தது. சிறையிலிருந்து வந்த சசிகலாவுக்கு பலத்த வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஆனாலும் அதிமுகவில் அவருக்கு இடமில்லை என்று ஒதுக்கப்பட்டார். ஆனால் தான் அதிமுக பொதுச்செயலாளர் என்று இன்று வரை சொல்லிக் கொண்டிருக்கிறார்.
இதற்கிடையில் ஓபிஎஸ் - இபிஎஸ் உடைத்துக் கொண்டு கட்சியை ஒருவரும் கட்சி அலுவலகத்தை ஒருவருமாக கைப்பற்றி அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில் இனி சின்னத்தையும் முடக்குவார்கள் என்ற நிலை உள்ளது. இந்த நிலையில்தான் சசிகலாவின் தம்பி திவாகரன் தான் தொடங்கிய அண்ணா திராவிடர் கழகத்தை சசிகலா தலைமையில் அதிமுக வில் இணைப்பதாக அறிவித்தார். இன்று இணைப்பு விழா ஏற்பாடுகள் தஞ்சை தமிழரசி மண்டபத்தில் நடந்தது.