கள்ளக்குறிச்சி மாவட்ட சிலம்பாட்டக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு (2021 - 2022) மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டி கடந்த 05.12.2021 ஞாயிற்றுக் கிழமை காலை 7.00 மணி முதல் இரவு 8.00 மணிவரை, சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் 48 வகையான தரவரிசையில், 40 வகையான தரவரிசை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் உள்பட 8 சிலம்பாட்ட கழகங்கள் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சியிலிருந்து, நாகம் பதினாறு 2 அணியினர்களும் , மாத்தூரிலிருந்து வீரப்பன் சிலம்பாட்ட கழகம், சின்ன சேலத்திலிருந்து மாஸ்டர் டிஃப்பன்ஸ் அகாடமி, SV.பொம்மன்னன் சிலம்ப ப் பள்ளி, குதிரை சந்தலிருந்து குமரிகண்ட தமிழர் சிலம்ப பயிற்சி மையம், உளுந்தூர்பேட்டையிலிருந்து SBM சிலம்பாட்ட கழகம் மற்றும் அஜீஸ்நகர் நேதாஜி சிலம்பாட்ட கழகம் என மொத்தம் 200 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
42 மாணவ, மாணவியர்கள் மாநில போட்டிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டனர். இதில், 20 மாணவர்களும், 22 மாணவியர்களும் என்பது குறிப்பிட்டதக்கது. அதில் 7 மாணவ, மாணவிகள், உளுந்தூர்பேட்டை வட்டத்தை சேர்ந்தவர்கள். சிலம்பம் விளையாட்டு போட்டியை C.பன்னீர் செல்வம், தலைவர், பெற்றோர் ஆசிரியர் கழகம் அவர்கள் துவங்கி வைத்தார்கள். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு அளிக்கும் விழாவில், வரவேற்புரையாக துரைமணி தலைவர் பேசினார்.
தலைமை ஏற்று விழா பேருரையாற்றி வெற்றி பெற்ற மாணவர், மாணவிகளுக்கு பரிசுகளை தா. உதயசூரியன், சங்காரபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக கழகம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் திரு. J.ஜவஹர்லாலும் வழங்கினார்.