Skip to main content

மந்திரியை வரவேற்க வந்த மாஜி மா.செ. – அதிர்ச்சியில் அதிருப்தியாளர்கள்

Published on 27/12/2018 | Edited on 27/12/2018

 


திருவண்ணாமலை மாவட்டத்தை அதிமுக தங்களது கட்சி நிர்வாகத்துக்காக வடக்கு, தெற்கு என இரண்டாக பிரித்து வைத்துள்ளது. தெற்கு மா.செவாக ராஜன் என்பவரும், வடக்கு மா.செவாக செய்யார் தொகுதி எம்.எல்.ஏ தூசி மோகனும் இருந்தனர். இதே மாவட்டத்தை சேர்ந்த ஆரணி தொகுதி எம்.எல்.ஏ சேவூர்.ராமச்சந்திரன் அறநிலையத்துறை அமைச்சராக இருந்து வந்தார்.

சேவூர் ராமச்சந்திரன்

m


அமைச்சருக்கும், தெற்கு மா.செ. ராஜனுக்கும் இடையே காரசாரமாக கடந்த ஓராண்டாக மோதல் நடைபெற்றுவந்தது. வெளிப்படையாக நடைபெற்று வந்த இந்த மோதலால் இருவரும் முதல்வர் எடப்பாடியிடமும், துணை முதல்வர் ஓ.பி.எஸ்சிடம் புகார் கூறி வந்தனர். இருவரையும் சமாதானம் செய்து வைத்து அனுப்பியபடி இருந்தனர்.

 

ra


இந்நிலையில் ராஜனுக்கு எதிர்ப்பாக அவரது ஆதரவாளரான ந.செ. செந்திலை தன் ஆதரவாளராக மாற்றினார் அமைச்சர். இதில் அமைச்சர் மீது இன்னும் அதிக கோபமானார் ராஜன். முன்னால் அமைச்சரும், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி சிறை சென்று கட்சியில் இருந்து ஓரம்கட்டி வைக்கப்பட்டுயிருந்த அக்ரி. கிருஷ்ணமூர்த்தியை மீண்டும் கட்சிக்குள் கொண்டுவந்தார் அமைச்சர். ராஜனையும் – அக்ரியையும் மோதவைக்க முடிவு செய்து அக்ரிக்கு மா.செ பதவியை வாங்கி தர முயன்றார். இதனால், தனக்கு இன்னொரு குடைச்சலாக இருக்கும் கலசபாக்கம் எம்.எல்.ஏ பன்னீரையும் அடக்கியதுபோல் இருக்கும் என எண்ணி காய் நகர்த்தினார். இதற்கு முன்னால் அமைச்சர் ராமச்சந்திரன், கலசபாக்கம் எம்.எல்.ஏ பன்னீர்செல்வம் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 பன்னீர்

p


தங்களது எதிர்ப்பை கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் தெரிவித்தனர். இதனால் கடந்த டிசம்பர் 25ந்தேதி அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரனையே மா.செவாக நியமித்து அறிவித்துவிட்டனர். இதனைக்கேட்டு மா.செ பதவி எதிர்ப்பார்த்தவர்கள் அதிர்ந்து போய்விட்டனர்.


இந்நிலையில் மா.செ பதவி கிடைத்ததும் நேராக முதல்வர் எடப்பாடியை சந்தித்து வாழ்த்து வாங்கிக்கொண்டு ஆரணிக்கு வந்தார் அமைச்சர். டிசம்பர் 26ந்தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் 15 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டிடங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்க கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜீ வந்தார். அவரை வரவேற்க தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் மா.செவான ராஜன், தனது எதிரியும் புதிய மா.செவும், அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரனின் தொகுதியான ஆரணிக்கே சென்று அமைச்சர் செல்லூர் ராஜீக்கு சால்வை அணிவித்து வரவேற்றது அவரது எதிர்ப்பாளர்களிடம் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.


பதவி பிடுங்கினா முடங்கிடுவார்ன்னு பார்த்தா, இப்பவும் பந்தாவாக வலம் வர்றாறே என ஆரணியில் அமைச்சரிடம் புலம்பியவர்கள், இந்த ஆளை எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்ககூடாது என முடிவு செய்துள்ளனர் என்றனர் கட்சியினர்.

 

சார்ந்த செய்திகள்