தென்காசி மாவட்ட பஞ்சாயத்து சாதாரண கூட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. இக்கூட்டத்திற்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்செல்வி தலைமை வகித்தார். மாவட்ட பஞ்சாயத்து செயலர் ருக்மணி முன்னிலை வகித்தார். மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் உதய கிருஷ்ணன் உட்பட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் 15 வது ஒன்றிய நிதிக்குழு மானியத் திட்டத்தின் நிதி மற்றும் மாநில நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் வரப் பெற்ற மொத்தம் 5.41 கோடிகளுக்கான திட்டப் பணிகளுக்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக 11 கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். அதன் பின் 7 கவுன்சிலர்களை திரும்ப அழைத்தும் மேலும் கூட்டத்திற்கு வராத 7வது வார்டு கவுன்சிலரை வரவழைத்தும் அவர்களின் மூலமாக தீர்மானங்கள் நிறைவேற்றி இருக்கிறார்கள். வார்டுகளில் பணிகள் நடக்கவில்லை தேங்கியுள்ளன என்று மக்கள் எங்களிடம் குறை கூறுகின்றனர் என்கிறார்கள் கவுன்சிலர்கள் மற்றும் கவுன்சிலர் கனிமொழி.