தமிழகத்தில் எஞ்சியுள்ள சங்க கால கோட்டையான புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டையின் உள்ளே அரண்மனைமேடுக்கு சற்று தூரத்தில் வேப்பங்குடி விவசாயி கருப்பையாவின் நிலத்தில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைகழகம் சார்பில் பேராசிரியர் இனியன் இயக்குநரான குழுவினர் கடந்த மாதம் 30ந் தேதி முதல் அகழாய்வுப் பணிகளை தொடங்கியுள்ளனர்.
பணிகளை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஆகியோர் தொடங்கி வைத்தனர். அகழாய்வின் போது பலவகையான மண் பானை ஓடுகள், மணிகள் காணப்பட்டது. தொடர்ந்து சுமார் 1.5 அடி ஆழத்தில் தொடங்கி 2.5 அடி ஆழம் வரை சுடுசெங்கலால் ஆன நீர்வழிப்பாதை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நீர்வழிப்பாதை அரண்மனை மேடு என்று சொல்லக்கூடிய பகுதியை நோக்கி செல்வதாக அமைந்துள்ளது. அதாவது சங்க கால 32 செ.மீ.க்கு 23 செங்கல் கட்டுமானம் உள்ளது. அரண்மனையில் இருந்து வெளியேறும் தண்ணீர் இந்தப் பாதை வழியாக வெளிறேும் என்று கூறப்படுகிறது. நீரவழிப்பாதை கண்டறியப்பட்ட நிலையில் ஆய்வாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தகவல் அறிந்து பல்கலைக்கழக துணைவேந்தர், அமைச்சர்கள், உள்ளிட்ட பலரும் ஆய்வுக்குழுவுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இங்கு கட்டுமானம் இருக்கலாம் என்று கூறும் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக ஆசிரியர் மங்கனூர் ஆ.மணிகண்டன் தொடர் அகழாய்வில் ஏராளமான தொன்மையை வெளிக்கொண்டுவரும் என்றார்.