வேலூர் மாவட்டம் குடியாத்தம், சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த முகமது இர்த்தீரிஸ் இவர் கவுண்டன்யா ஆற்றங்கரை அருகே ஜோதிமடம் பகுதியில் தேங்காய் நார் கம்பெனி நடத்தி வருகிறார்
கடந்த மாதம் 10 ம் தேதி அவருக்கு சொந்தமான சுமார் 1000 கிலோ எடை கொண்ட இரும்பு லாக்கர் பெட்டியை குடியாத்தம் ஜோதிமடம் பகுதியில் உள்ள மசூதிக்கு அருகில் டிராக்டரில் இறக்கியுள்ளார் இந்த நிலையில் மசூதி அருகில் மர்மமான முறையில் இரும்பு பெட்டி இருப்பதாகவும் அதில் புதையல் இருப்பதாகவும் குடியாத்தம் நகர போலீசாருக்கும் வருவாய் துறையினருக்கும் சிலர் தகவல் தெரிவித்தனர் மேலும் இந்த தகவல் காட்டுத் தீயாய் பரவியது இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி மற்றும் குடியாத்தம் நகர போலீசார் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் வெங்கட்ராமன், தாசில்தார் விஜயகுமார் ஆகியோர் விசாரணை நடத்தினர்
பின்னர் பல மணி நேரம் போராடி பெட்டியை உடைக்க முடியாத நிலையில் பின்னர் இயந்திரம் மூலம் உடைக்க முடிவு செய்து இயந்திரம் வரவழைக்கப்பட்டு பெட்டியை உடைக்க முடியாமல் அதிகாரிகள் திணறினர். இதனையடுத்து குடியாத்தம் ஜோதிமடம் பகுதியில் இருந்து குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஜேசிபி இயந்திரம் மூலம் கொண்டு செல்லப்பட்ட இரும்பு பெட்டி அங்கு ஒரு அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது
ஒரு மாதம் கடந்த நிலையில் இன்று குடியாத்தம் வட்டாட்சியர் விஜயகுமார் மற்றும் காவல்துறையினர் வருவாய்த்துறையினர் முன்னிலையில் பெட்டி உடைக்கப்பட்டது அப்பொழுது பெட்டியில் புதையல் இருக்கும் என எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் சுதேசி மித்ரன் நாளிதழும் பழைய நாணயங்கள் சிலவும் இருந்தது இதனால் புதையல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மேலும் உடைக்கப்பட்ட பெட்டி மசூதி நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்படும் என வருவாய் துறையினர் தெரிவித்தனர்.