Skip to main content

இயக்குநர் லிங்குசாமிக்கு சிறை; தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம்

Published on 12/04/2023 | Edited on 12/04/2023

 

nn

 

காசோலை மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.

 

கடந்த 2014 ஆம் ஆண்டு கார்த்திக் - சமந்தா நடிப்பில் 'எண்ணி ஏழு நாள்' என்ற படத்தை தயாரிப்பதற்காக பி.வி.பி கேப்பிடல் நிறுவனத்திடம் ஒரு கோடியே மூன்று லட்சம் ரூபாயை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்காக கடனாக பெற்றிருந்தார் இயக்குநர் லிங்குசாமி. கடன் தொகைக்காக லிங்குசாமி கொடுத்த 35 லட்ச ரூபாய்க்கான காசோலை வங்கியில் பணம் இல்லாமல் திரும்பியது. இதனால் பி.வி.பி கேப்பிடல் நிறுவனம் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு பதிவு செய்தனர்.

 

இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி லிங்குசாமிக்கு ஆறு மாத காலம் சிறை தண்டனை தீர்ப்பளித்திருந்தது. மேலும் பி.வி.பி கேப்பிடல் நிறுவனத்திடம் பெற்ற கடனை வட்டியுடன் சேர்த்து செலுத்த வேண்டும் எனவும்  உத்தரவு பிறப்பித்து இருந்தது.

 

சைதாப்பேட்டை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து லிங்குசாமி தரப்பில் சென்னையில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த வாரம் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி அல்லி சைதாப்பேட்டை நீதிமன்றத்தின் சிறை தண்டனை உத்தரவை உறுதி செய்து, லிங்குசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த தீர்ப்பளித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்