![b](http://image.nakkheeran.in/cdn/farfuture/mqNSIZjKLSrodwnIGBt5XKyZ_Oa5vMgBBazt76fpu78/1549747708/sites/default/files/inline-images/bala1.jpg)
வர்மா படத்திலிருந்து விலகிக்கொள்வது என்பது நான் மட்டுமே எடுத்த முடிவு. படைப்பு சுதந்திரம் கருதி இது நான் மட்டுமே எடுத்த முடிவு. படத்தில் இருந்து விலகியது குறித்து ஜனவரி 22ம் தேதி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் தெரிவித்த தவறான தகவலால் விளக்கம் அளிக்கம் வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு. மற்றபடி, துருவ் விக்ரமின் எதிர்கால நலன் கருதி மேலும் பேச விரும்பவில்லை என்று இயக்குநர் பாலா தெரிவித்துள்ளார்.
![v](http://image.nakkheeran.in/cdn/farfuture/lxBM2jfnGXNHC_BpjQII157ghECZ3r8M8meANbDZ19g/1549747746/sites/default/files/inline-images/Varma_0.jpg)
இயக்குநர் பாலா இயக்கத்தில் சீயான் விக்ரம் மகன் துருவ் நடித்துள்ள படம் ‘வர்மா’. தெலுங்கில் வெற்றி பெற்ற அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான இப்படம் இம்மாதம் திரைக்கு வர இருந்தது. இந்நிலையில், இப்படத்தை இயக்கிய தயாரிப்பு நிறுவனம், கடந்த 7.2.2019 அன்று வர்மா படம் கைவிடப்படுகிறது. தெலுங்குப்படமான அர்ஜூன் ரெட்டி போல் வர்மா படம் விறுவிறுப்பாக இல்லாததால் கைவிடப்படுகிறது. துருவ் விக்ரம் மட்டும் அடுத்த தயாரிப்பில் இருக்கிறார். மற்றபடி புதிய இயக்குநரைகொண்டு மீண்டும் இப்படத்தை தயாரிக்க இருப்பதாக நிறுவனம் அறிவித்தது. இதையடுத்து பாலா இன்று மேற்கண்டவாறு விளக்கம் அளித்துள்ளார்.
![b](http://image.nakkheeran.in/cdn/farfuture/5SgyM1NKX-2M4TXist61dsIhRvnxJCchMoQf_h9Ad6c/1549748646/sites/default/files/inline-images/bala%20letter.jpg)