திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. கல்லூரியில் மாணவி தற்கொலை!
திண்டுக்கல் அருகே உள்ள பிரபல பி.எஸ்.என்.ஏ. கல்லூரியில் தகவல் தொழில்நுட்பப்பிரிவு இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வண்டியூரைச் சேர்ந்த மாணவி தாரணி. இவர் கல்லூரியில் உள்ள மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகிறார். நேற்று இரவு விடுதியில் உள்ள மூன்றாவது மாடியில் இருந்து மாணவி தாரணி திடீரென குதித்து தற்கொலை செய்துகொண்டனர். ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் மாணவி தாரணியை சேர்த்தும் சிகிச்சை பலன் அளிக்கததால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் சம்மந்தப்பட்ட கல்லூரியில் ஒருநாள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
- சக்தி