மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பாக திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனையில் ரூபாய் 18 கோடி மதிப்பில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிறப்பு மைய கட்டிடத்தை காணொலிக் காட்சி மூலமாக தமிழக முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
இந்த விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், திண்டுக்கல் அரசு மருத்துவமனையின் இயக்குனர் பூங்கோதை மற்றும் அரசு தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர்.சுரேஷ் பாபு உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி, தனியார் மருத்துவமனைக்கு இணையாக கட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே திண்டுக்கல்லில் கடந்த ஆண்டு 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரசவங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த கட்டிடத்தில் ஒருங்கிணைந்த மகப்பேறு பச்சிளம் குழந்தைகளுக்கான ஐந்து தளங்கள் கொண்ட கட்டிடம் இதில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டிடத்தில் பிரசவத்திற்கு முன்பும் பின்பும் மருத்துவம் பார்ப்பதற்கான அறைகளும் பச்சிளம் குழந்தைகள் அறை குழந்தைகள் பராமரிப்பு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு காத்திருப்பு அறை உணவகம் மற்றும் தனியான மருந்தகம் போன்ற தனித்தனி கட்டிடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. அதுபோல், அதி நவீனமான மருத்துவமனை கட்டிடம் ஆகவும் நோயாளிகள் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனை தலங்களுக்கு செல்வதற்கு மின்தூக்கிகளும் பொருத்தப்பட்டு தனியாருக்கு நிகரான ஒரு அரசு மருத்துவமனை கட்டிடமாக திகழும்." இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பேசினார்.
ஆனால் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு கண்காணிப்பாளராக டாக்டர். சுரேஷ் பாபு வந்ததிலிருந்து மருத்துவமனையில் சில புதிய கட்டிங்கள் உருவாகி இருப்பதன் மூலம் தினசரி ஆயிரக்கணக்கான நோயாளிகள் பயன் அடைந்தும் வருகிறார்கள். அதுபோல் உள்நோயாளிகளுக்கும் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த அளவுக்கு திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு வருவதின் மூலம்தான் தற்போது தமிழக அரசும் நவீன வசதிகளுடன் புதிய கட்டிடங்களையும் உருவாக்கிக் கொடுத்து இருக்கிறது.