பிரபலமான தனியார் தொலைக்காட்சியில் அடுத்த மாதம் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. இதற்கான போட்டியாளர்களைத் தேர்வு செய்யும் பணி நடந்து வருவதாக செய்திகள் சமீப காலமாக வந்து கொண்டிருக்கிறது. முதல் இரண்டு சீசன்களைப் போலவே, இதையும் கமலே தொகுத்து வழங்குகிறார் என்ற தகவலும் வந்துள்ளது. இதற்கான புரொமோ ஷூட் கடந்த வாரம் நடைபெற்றுள்ளது. ஆனால் வழக்கம் போலவே இவர்கள் தான் போட்டியாளர்கள் என சமூக வலைதளைங்களில் அந்த நிகழ்ச்சியின் ரசிகர்கள் ஆளாளுக்கு ஒரு பட்டியல் வெளியிட்டு வருகின்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த சம்பந்தப்பட்டவர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், முதல் சீசன் மூலம் பிரபலமான ஜூலி மீண்டும் மூன்றாவது சீசனில் கலந்து கொள்ள இருப்பதாக கடந்த சில நாட்களாக ஒரு தகவல் பரவி வருகிறது.இந்தச் சூழ்நிலையில் ஜூலி மீண்டும் பிக் பாஸில் கலந்து கொள்கிறாரா என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.தான் பிக் பாஸ் 3ல் கலந்து கொள்ளவில்லை என உறுதியாக அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஜூலி தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், சில படங்களில் நாயகியாகவும் பணியாற்றி வருகிறார்.