Skip to main content

“நிறைய நேரங்களில் எங்கள் உயிரையும், ஜெவின் உயிரையும் பறிப்பதற்கு முயற்சி செய்தார்கள்”- திவாகரன் 

Published on 21/09/2019 | Edited on 21/09/2019

அண்ணா திராவிடர் கழகத்தின் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் நடைபெற்றது. பொதுசெயலாளர் திவாகரன் தலைமை விகித்தார். இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி செயலாளர் ஜெய்ஆனந்த முன்னிலை வகித்தார். அவைத்தலைவர் சுந்தர்ராஜன் பொருளாளர் சுப்ரமணியன், திருச்சி மண்டல அமைப்பு செயலாளர் கோவிந்தராஜ், கலந்து கொண்டனர். மாநகர மாவட்ட செயலாளர் பக்குரூதீன் வரவேற்றார். அல்லூர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

dhivakaran

 

 

கூட்டத்தில் பேசிய திவாகரன், “இந்த கூட்டம் அமைதியாக இருப்பதை பார்த்தால் எந்த அளவுக்கு உத்வேகத்தோடு இருக்கிறீர்கள் என்பது தெரியது. கொடி ஏற்றுவதற்கு நிறைய இடங்களில் அனுமதி கிடைப்பதில்லை என்று சொன்னார்கள். அரசியல் என்றால் ஒருத்தரை திட்டிக்கொள்ள வேண்டும் சண்டை போட வேண்டும் என்று இல்லை. அரசியல் என்றால் முட்டிமோதி கொள்ள வேண்டும் என்று இல்லை. அதானல் பிரச்சனையில்லாம் எதையும் செய்யுங்கள்.

உலகமே வியந்து பாராட்டிய ஒருவரின் பெயரில் நாம் கட்சி நடத்துகிறோம். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணம் உண்டு என்று சொன்ன அண்ணாவின் பெயரில் கட்சி நடத்துகிறோம். அண்ணாவை எதிர்த்து காமராஜர் தோற்ற போது கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். ஆனால் அண்ணா பெருந்தலைவர் தோல்வி அடைந்து விட்டார். இனிப்பு வேண்டாம் என்று சொல்லி தவிர்த்துவிட்டார்.

அண்ணாவின் இதயக்கனி தான் மக்கள் திலகம். ஒரு நாள் அவருடன் காரில் சென்ற போது ஒரு முக்கிய பிரமுகர் கருணாநிதியை பத்தி தப்பு தப்பாக நிறைய சொல்லிக்கொண்டே வருகிறார். உடனே அவரை கீழே இறக்கிவிட்டு சென்றார் எம்.ஜி.ஆர். அதன் பிறகு எம்.ஜி.ஆர். உயிரோடு இருக்கும் வரை அந்த பிரமுகருக்கு பதவி கொடுக்கவே இல்லை. ஜெ.வை வந்த பிறகு தான் பதவி வாங்கினார்கள். ஜெ.வை ஈசிய ஏமாத்திடலாம்.

இப்போது ஜெ.வை யார் எல்லாம் ஏமாற்றினார்களோ அவர்கள் தான் உச்சாணி கொம்பில் அமர்ந்திருக்கிறார்கள். ஜெ.வுக்கா எதையும் செய்யக்கூடியவர்கள் எல்லாம் எட்டி நிற்கிறார்கள் . எம்.ஜி.ஆர். இறந்த பிறகு இரண்டு அணிகளாக பிரிந்ததில் இருந்து ஜெ.வுக்கு யார் எல்லாம் ஆதரவாக பின்புலமாக இருந்தார்களோ அவர்கள் யாரும் தற்போது அமைச்சர்களாக இல்லை. ஒருவரை தவிர அவர் செங்கோட்டையன் மட்டும். அவரும் லாவகமாக நடந்து கொள்ளவில்லை என்றால் அவரையும் தூக்கி எறிந்து விடுவார்கள்.

4500 பிள்ளைகளுக்கு கல்லூரி வைத்து நடத்துகிறேன். பி.எச்.டி வழிகாட்டியாக இருக்கிறேன். என்னிடம் எந்த தவறான வழிகாட்டுதலும் இருக்காது. துரோகம் செய்தவர்கள் எல்லாம் ஓடிவிட்டார்கள். புடம்போட்ட தங்கங்களாகிய நீங்கள் மட்டும் தான் இருக்கிறீர்கள். எம்.எல்.ஏ, எம்.பி, வாரிய தலைவர் எதிர்பார்த்த நீங்கள் என்னுடன் இருக்கிறீர்கள்.

எம்.ஜி.ஆர். 18 பேரை வைத்து சத்தியா ஸ்டூடியோவில் ஆரம்பித்த கட்சி இன்றைக்கு எப்படி வளர்ந்து நிற்கிறது. ஜெவிடம் பணம் இருந்தால் அரசியலில் ஜெயித்து விடுவார்கள் என்று முன் கூட்டியே திட்டம் போட்டு தனிமைப்படுத்தி எந்த ஆதரவும் இல்லாத நிலையில் தான் நாங்கள் உயிரை பணையம் வைத்து இறங்கினோம்.

நிறைய நேரங்களில் எங்கள் உயிரையும், ஜெவின் உயிரையும் பறிப்பதற்கு முயற்சி செய்தார்கள். அதை எல்லாம் நாங்கள் முறியடித்தோம். ஜெ. ஜெயித்த பிறகு நிறைய வியாபாரிகள் கட்சிக்குள் வந்து வளர்ந்தார்கள். இந்த வியாபாரிகளால் தான் ஜெ. 1996ம் ஆண்டு தோற்க வேண்டிய நிலை வந்தது.

அன்றைக்கு அமித்ஷாவையும், நரேந்திரமோடியை சி.பி.ஐ. அலுவலகத்திற்கு உட்கார வைத்த சிதம்பரம், இன்றைக்கு திகார் சிறையில் இருப்பார் என்று நினைத்திருப்பாரா ?

சசிகலா உயிரை நான் ஏற்கனவே பலமுறை காப்பாற்றி இருக்கிறேன். அதை எல்லாம் விளம்பரபடுத்திக்கொள்ளவில்லை. இப்போது காப்பாற்ற வேண்டிய நேரத்தில் என்னால் காப்பாற்ற முடியாமல் போயிவிட்டது.
 

 

சசிகலாவை முதல்அமைச்சராக முன்னிறுத்தாமல் இருந்திருந்தால் 1 வருடம் கழித்து பொதுசெயலாராக, முதல்வராக இருந்திருப்பார். இன்றைக்கு அதிமுக சிதைந்து விட்டது.

வேலூரில் 4.50 இலட்சம் ஓட்டு வாங்கிவிட்மோம் என்று எடப்பாடியும், ஓ.பி.எஸ்சும் சொல்கிறார்கள். இல்லவே இல்லை கிடையாது அது ஏ.வி.சண்முகத்தின் தனிப்பட்ட முறையில் வாங்கின ஓட்டு. அவர் தனித்து நிற்கும் போதே 3.50 இலட்சம் ஓட்டு . ஓ.பி.எஸ். மகன் ஜெயிச்சதுக்கு காரணம் காங்கிரசுக்கு ஒதுக்கியதால் ஜெயித்தார்.

நீங்கள் அரசியலுக்கு வந்தால் தீர்ப்பு மாறிவிடும். நீங்கள் சிறை செல்வீர்கள் என்று சொல்லியும். அவர் மாயவலையில் சிக்கி இன்று சிறையில் இருக்கீறார். எதிரிகள் வெளியில் இருந்தால் காப்பாற்றியிருப்பேன். குடும்பத்திற்குள் இருப்பதால் என்ன செய்து என்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டிருக்கிறேன். சொந்த சித்தியவை நம்பவச்சு ஜெயிலுக்கு அனுப்பி நிராயுதபாணியாக்கிவிட்டான். அந்த காலத்தில் புராணத்தில் நடந்தது எல்லாம் தற்போது நடந்து கொண்டிருக்கிறது” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்