Skip to main content

தீபாவளிக்கு ஊருக்கு போகனுமா? ரயில்களில் இன்றே டிக்கெட் புக் செய்யலாம்!

Published on 05/07/2018 | Edited on 05/07/2018


 

 

தீபாவளி பண்டிகையையொட்டி ரயில் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு இன்று தொடங்க உள்ளது.

வெளியூர்களில் இருப்பவர்கள் என்ன ஆனாலும் தீபாவளி உள்ளிட்ட முக்கிய பண்டிகை தினங்கள் அன்று தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். எனவே, தீபாவளி உள்ளிட்ட முக்கிய பண்டிகை காலங்களில் ரெயில்களில் கூட்டம் அலைமோதும்.

இதனால், வெளியூர் செல்லும் பயணிகள், தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். பொதுமக்களின் வசதி கருதி 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. இந்த ஆண்டு நவம்பர் 6-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

இதையொட்டி ரெயில்களில் வெளியூர் செல்வதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்க உள்ளது. தீபாவளி செவ்வாய்கிழமை வருவதால் பெரும்பாலானவர்களுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை தினமாக தான் இருக்கிறது. இதனால், தீபாவளிக்கு முந்தைய வாரம் வெள்ளிக்கிழமையில் (நவம்பர் 2-ம்) இருந்தே பலர் சொந்த ஊர்களுக்கு புறப்படுவார்கள். 

இதனால், முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிடும். முக்கியமாக தென்மாவட்டங்களுக்கு உடனடியாக டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிடும். இதனால், நவம்பர் 3-ம் தேதி சனிக்கிழமை பயணம் செய்வோர் ஜூலை 6-ம் தேதி, நவம்பர் 4-ம்தேதி ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் செல்பவர்கள் ஜூன் 7-ம் தேதியும் முன்பதிவு செய்யலாம்.

சார்ந்த செய்திகள்