பக்தர்கள் சூழ, ஆடி வந்த, ஆடித் தேர்
தர்க்கத்தால் பிளவு பட்டுப் போய் நின்ற சைவர்களையும் வைணவர்களையும் ஒற்றுமைப் படுத்தும் வகையில் தன் உடலில் ஒரு பாதி அரியும் மறுபாதி சிவனாகவும் பொருந்திய திருவடிவோடு பக்தர்களுக்குக் காட்சி கொடுத்து சைவமும் வைணவமும் ஒன்றே என்று உணர்த்தினார் சிவபெருமான்.
அப்படிப் பொருந்தியிருக்கும் திருகோலத்தைக் காட்டியருள வேண்டும் என்று தம்மை வணங்கி நின்ற அம்மையை நோக்கி சிவபெருமான். பூலோகத்தின், பொதிகை மலைச் சாரலில் உள்ள புன்னை வனத்து தலமாகிய சங்கரநயினார் கோவில் எனும் பதியில் தவம் செய்து நீ விரும்பிய திருமேனியைத் தரிசிக்க என்று அருளினார்.
சிவபெருமானின் அருள்வாக்குப்படி தவமிருந்த அம்மையின் தவத்திற்கிணங்க சிவபெருமான், அருள் தரும் கோமதி அம்பிகைக்குக் காட்சி கொடுத்தருளினார். அந்த அரியக் காட்சியையே தவசுக் காட்சி என்று கண்டு களித்து வணங்கி வருகிறோம். அப்படிப்பட்ட அரிய அற்புதக் காட்சி நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் நடந்தாக வரலாறு. அக்காட்சி ஆடி மாதத்தில் நடந்ததால் ஆடித்தபசு விழா பதினோரு நாட்கள் சங்கரநாராயணர் என பெரிய ஆலயமாய் அமைந்திருக்கும் சங்கரன்கோவில் நடந்து வருகிறது.
9ம் திருநாளான 04/08/2017 அன்று காலை திருக்கோவிலின் திருத்தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சிவபெருமானைப் பிரார்த்தித்தபடி வடம்பிடித்து இழுக்கப்பட்ட தேரோட்டம் கோலகலமாக நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, அமைச்சர் ராஜலெட்சுமி, நகர முனிசிபல் ஆணையர் தாணுமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர் தேரோட்ட நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலய துணை ஆணையர் செல்லத்துரை மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். நகர காவல் துறையின் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
செய்தி : படங்கள் : ப.இராம்குமார்