திருச்சி கிழக்கு தாசில்தார் அலுவலகம் டவுன்ஸ்டேஷன் என்று அழைக்கப்படும் இடத்தில் உள்ளது. இந்த பகுதியில்தான் கோட்டை காவல் நிலையம் அருகே உள்ளது. இங்க உள்ள தாசில்தார் அலுவலகத்தில்தான் துணை தாசில்தாராக பணியாற்றி வருபவர் காளீஸ்வரி.
அவர் இன்று அலுவலகத்தில் தனது செல்போனை டேபிளில் வைத்து விட்டு வேலை பார்த்துக்கொண்டிருந்தார். வேலை விஷயமாக அதே பகுதியில் உள்ள அதிகாரிகளிடம் பேசிவிட்டு வந்து பார்த்தபோது துணைதாசில்தார் காளீஸ்வரி டேபிளில் வைக்கப்பட்டு இருந்த செல்போனை தேடியபோது அங்கே இல்லாததை பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார்.
இது தொடர்பாக மற்றும் ஊழியர்கள் உடனடியாக துணை தாசில்தார் காளீஸ்வரி செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட் ஆப் செய்யப்பட்டு இருந்தது. உடனே இது தொடர்பாக குற்றப் பிரிவு போலீசில் துணை தாசில்தார் காளீஸ்வரி புகார் அளித்துள்ளார்.
இதில் கொடுமை என்னவென்றால் இந்த தாசில்தார் அலுவலகத்திற்கு அருகே அடுத்த கட்டிடம் கோட்டை மகளிர் காவல் நிலையம் அதற்கு அடுத்து கோட்டை சட்ட ஒழுங்கு போலீஸ் நிலையம் உள்ளது . இந்த இடம் எப்போதும் பரபரப்பாக பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் வந்து செல்லும் இந்த இடத்தில் துணை தாசில்தார் அலுவலகத்திற்கு உள்ளே நுழைந்து செல்போன் திருடப்பட்ட சம்பவம் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் வந்து செல்லும் தாசில்தார் அலுவலகத்தில் சிசிடிவி கேமரா இல்லாதது போனால் திருடு போனதை கண்டுபிடிக்க முடியாமல் திணறிவருகிறார்கள்.