தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் 14வது பட்டமளிப்பு விழா சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அதேபோல் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தரும் தமிழகத்தினுடைய துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினும் கலந்து கொண்டார்.
மொத்தமாக 3,576 பேருக்கு பட்டமளிப்பு நடைபெற்று வருகிறது. அண்மையாகவே தமிழக அரசுக்கும் ஆளுநருக்கு இடையே பல முரண்கள் ஏற்பட்டிருந்தது. அண்மையில் காந்தி ஜெயந்தி அன்று காந்தி மண்டபத்தை சுத்தம் செய்யச் சென்ற ஆளுநர், அங்கு மதுபாட்டில்கள் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி தெரிவித்ததோடு, காந்தி மண்டபத்தை தமிழக அரசு சுத்தமாக பராமரிக்க முடியாதா என செய்தியாளர் மத்தியில் பேசியிருந்தார்.
அதற்கு நேற்று முன்தினம் மாலையே மூத்த அமைச்சரான ரகுபதி பதிலளித்திருந்தார். ஆளுநரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்ததோடு, ஆளுநர் பாதை விலக வேண்டும் என்பதில் தங்கள் உறுதியாக இருப்பதாகவும் அமைச்சர் ரகுபதி தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று நடைபெற்ற பட்டமளிக்கும் விழாவில் துணை முதல்வரும், ஆளுநர் ஆர்.என்.ரவியும் ஒரே மேடையில் பங்கேற்றது நிகழ்ந்துள்ளது.