அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு!
நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் அரசியல் கட்சிகளோ, தனி நபர்களோ போராட்டம் நடத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதையடுத்து, திருச்சியில் நடைபெற இருந்த அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு தமிழக காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பொதுக்கூட்டத்திற்கு பல்லாயிரக்கணக்கானோர் கூடிவிட்ட நிலையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.