கடந்த இரண்டு வருடங்களாகவே உலக அளவில் மிகப் பெரும் பேசுபொருளாக இருக்கிறது கரோனா. தற்போது வரை கரோனா பாதிப்புக்கு எதிராக உலகநாடுகள் தடுப்பூசிகளை செலுத்தி போராடி வருகிறது. தற்பொழுது புதிதாக 'ஒமிக்ரான்' என்ற வைரஸ் பரவலால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டிய நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
ஒருபுறம் இப்படி இருக்க மறுபுறம் டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவி வரும் நிலையில் அதற்கான தடுப்பு நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பெரம்பலூர் தலைமை அரசு மருத்துவமனையில் 9 பேர் டெங்கு காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு குறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சுகாதார அலுவலர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் வீடுகளுக்குச் சென்று அங்கு டெங்கு வராமல் தடுப்பதற்காக தேங்கி இருக்கிற தண்ணீரை அகற்றுவது, தினந்தோறும் கொசு மருந்து தெளிப்பது, புகை மருந்து அடிப்பது, லார்வாக்களை அழிப்பது போன்ற செயல்களைச் செய்து வருகின்றனர். மக்கள் சுகாதார வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.