நீட் தேர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம்: சுப.வீ அறிவிப்பு
அனிதாவின் தற்கொலைக்குக் காரணமான, நீட் தேர்வை எதிர்த்து 06.09.2017 புதன் காலை 11 மணிக்கு, சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகில், திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக நீதி காக்க அனைவரும் அணி திரள வேண்டும் என்று திராவிட இயக்கத் தமிழர் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.