Published on 25/06/2021 | Edited on 25/06/2021
டெல்டா பிளஸ் வைரஸ் தொடர்பாக தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், "சென்னை, காஞ்சிபுரம், மதுரையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். டெல்டா பிளஸ் வைரஸ் வேகமாகப் பரவும் தன்மைக் கொண்டதால் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க வேண்டும். டெல்டா பிளஸ் வைரஸ் நுரையீரலைக் கடுமையாகப் பாதித்து எதிர்ப்பு சக்தியை வெகுவாகக் குறைக்கும் தன்மை கொண்டது. பரிசோதனை, தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 9 பேருக்கு டெல்டா பிளஸ் தொற்று உறுதியான நிலையில் மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.