Published on 29/12/2021 | Edited on 29/12/2021

ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூபாய் 3 கோடி மோசடி செய்த புகாரில், தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க தனிப்படை காவல்துறையினர், டெல்லி விரைந்துள்ளனர்.
ஏற்கனவே, பெங்களூரு, வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்டப் பகுதிகளில் தனிப்படை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த நிலையில், ராஜேந்திர பாலாஜி டெல்லியில் இருப்பதாக வந்த தகவலையடுத்து, தனிப்படை காவல்துறையினர் டெல்லி விரைந்துள்ளனர்.
இதனிடையே, ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஏழு புகார்கள் வந்துள்ளதாக விருதுநகர் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.