Published on 18/04/2023 | Edited on 18/04/2023
சிதம்பரம் அருகே சி.முட்லூர் அரசு கலை கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் இந்திய வரலாற்றை இருட்டடிப்பு செய்யும் ஒன்றிய அரசின் நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு (NCERT) வெளியிட்டுள்ள வரலாற்றுப் பாடநூலில் முகலாயர்களின் வரலாற்றையும் இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் பற்றிய பாடத்தையும் நீக்கியதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய மாணவர் சங்கத்தின் கிளை செயலாளர் அவினேஷ தலைமை தாங்கினார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் லெனின் கண்டன உரையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் சௌமியா மற்றும் மாணவர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கல்லூரி மாணவ மாணவிகள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.