Skip to main content

வலுவிழக்கத் தொடங்கிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் - வானிலை ஆய்வு மையம் தகவல்

Published on 22/11/2022 | Edited on 22/11/2022

 

 Decreasing depression-Meteorological Center Information

 

மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்பொழுது வலுவிழந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

 

இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது இன்று காலை முதல் வலுவிழக்கத் தொடங்கி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நீடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை வெளியிடப்பட்ட வானிலை அறிவிப்பில் அடுத்த ஐந்து தினங்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு சில இடங்களில் வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தாலும் மழைக்கான வாய்ப்புகளில் மாற்றமின்றி அதே நிலையில் நீடிப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்