சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அரசு மருத்துவர்களின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இதில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “தம்பி அண்ணாமலை இதையெல்லாம் கொஞ்சம் பேச வேண்டும். என் மணலை விற்கிறான். அதை பேச வேண்டும். என் நீரை உறிஞ்சி விற்கிறான் அதை கொஞ்சம் பேச வேண்டும். எல்லாத்தையும் விட்டுவிட்டு மதம் என்றே பேசக்கூடாது. மதம் கொண்ட யனையை கடைசியில் என்ன செய்வார்கள். புதைத்து விடுவோம். யானைக்கு மனிதனுக்கும் மதம் பிடித்தால் அழிவு தான் மிஞ்சும் என்று கவிஞர் மு.மேத்தா கூறுகிறார்.
இதை எல்லாம் பேசுங்கள். இது உங்கள் அரசு உங்கள் ஆட்சியின் பிரச்சனை இது. எட்டு ஆண்டுகள் இருந்துள்ளீர்கள். இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளது. இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள். அன்புத் தம்பி அண்ணாமலைக்கு ஒரு கோரிக்கை வைக்கின்றேன். தயவு செய்து இந்த போராட்டத்தில் வந்து பங்கு கொள்ளுங்கள். எனக்கு ஒரு ஓட்டு கூட போட வேண்டாம். உங்களுக்கே போடச் சொல்லுகின்றேன். தயவு செய்து இந்த பிரச்சனையை கவனத்தில் எடுங்கள்” எனக் கூறியுள்ளார்.