தாய் தமிழகத்தோடு குமாி மாவட்டம் இணைந்த 63 ஆவது ஆண்டையொட்டி அரசு சாா்பில் மாா்ஷல் நேசமணி சிலைக்கு இன்று மாலை அணிவித்து மாியாதை செலுத்தப்பட்டது.
திருவிதாங்கூா் சமஸ்தானத்தோடு இருந்த குமாி மாவட்டம் பிாிக்கப்பட்டு 1956 நவம்பா் 1-ம் தேதி தாய் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. இதில் திருவிதாங்கூா் சமஸ்தானத்தில் இருந்து மொழி வாாியாக பிாிக்கப்பட்டதில் தமிழ்மொழி பேசுபவா்கள் அதிகம் இருந்த அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு ஆகிய நான்கு தாலுக்காக்கள் குமாி மாவட்டத்துடனும் செங்கோட்டை தாலுகா நெல்லை மாவட்டத்துடனும் இணைக்கப்பட்டது.
இதற்காக மாா்ஷல் நேசமணி தலைமையில் குமாி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க நடந்த போராட்டத்தில் 1954 ஆகஸ்ட் 11-ல் புதுக்கடை, மாா்த்தாண்டம், மூலச்சல் ஆகிய இடங்களில் நடந்த துப்பாக்கி சூட்டில் அருளப்பன், முத்துசாமி, செல்லப்பா பிள்ளை, பீா் முகம்மது உட்பட 11 போ் உயிாிழந்தனா்.
இதன் பின்னா் 1956 நவம்பா் 1-ம் தேதி காமராஜா் முதல்வராக இருந்தபோது அவா் தலைமையில் நாகா்கோவில் எஸ்.எல்.பி பள்ளியில் வைத்து நடந்த விழாவில் குமாி மாவட்டத்தை திருவிதாங்கூா் சமஸ்தானத்தில் இருந்து பிாித்து தமிழகத்துடன் இணைக்கப்பட்டது.
பின்னா் 1983-ம் ஆண்டு எம்.ஜி.ஆா் முதல்வராக இருந்த போது குமாி மாவட்ட விடுதலை தியாகிகளின் வேண்டுகோளை ஏற்று நவம்பா் 1-ம் தேதி குமாி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அறிவித்தாா்.
இந்த நிலையில் குமாி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்து இன்று 63 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி நாகா்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள மாா்ஷல் நேசமணி மணிமண்டபத்தில் அவாின் சிலைக்கு அரசு சாா்பில் மாவட்ட ஆட்சியா் பிரசாந் வடநேரா மாலை அணிவித்து மாியாதை செலுத்தினாா். இதில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், எஸ்.பி ஸ்ரீ நாத், செய்தி மக்கள் தொடா்பு அதிகாாி நவாஸ் கான் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இதை போல் மத்திய மந்திாி பொன் ராதாகிருஷ்ணனும் மாலை அணிவித்து மாியாதை செலுத்தினாா்.
இதைபோல் பல்வேறு அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மாியாதை செலுத்தினாா்கள்.