Published on 10/12/2021 | Edited on 10/12/2021

வேலூரில் பேருந்தில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்த கல்லூரி மாணவன் கை நழுவி கீழே விழுந்து நூலிழையில் உயிர்தப்பிய வீடியோ காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் தொரைப்பாடியில் தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சிலர் காட்பாடியிலிருந்து செல்லும் அரசு பேருந்தில் ஆபத்தான வகையில் பேருந்தின் ஜன்னல் கம்பிகளைப் பிடித்தபடி பயணித்தனர். பேருந்தை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் இதனை வீடியோ எடுத்துள்ளனர். அப்பொழுது அந்த மாணவர்களில் ஒருவன் கை நழுவி கண்ணிமைக்கு நேரத்தில் கீழே விழுந்தான். அந்த நேரம் பார்த்து பெரிய வாகனங்கள் எதுவும் வராததால் மாணவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.
இந்த வீடியே இணையத்தில் வைரலாக பரவி வருகிறது...