Skip to main content

புயல் எச்சரிக்கை-நாகை, தூத்துக்குடி உள்ளிட்ட பல இடங்களில் புயல் கூண்டு ஏற்றம்

Published on 20/11/2022 | Edited on 20/11/2022

 

Cyclone warning-Storm cage boom in many places including Nagai, Thoothukudi

 

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பல மாவட்டங்களில் கன மழை பொழிந்தது. குறிப்பாக மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட இடங்களில் அதிகபட்ச மழைப்பொழிவு இருந்தது. இந்நிலையில் இன்றிலிருந்து மீண்டும் வடகிழக்கு பருவமழைக்கான மழைப்பொழிவு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

 

வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல மாவட்டங்களில் மழை வாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதன் காரணமாக புயல் எச்சரிக்கையும் விடப்பட்டிருந்தது. இந்நிலையில் எண்ணூர், நாகை, தூத்துக்குடி, பாம்பன், கடலூர் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களிலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்