அண்ணனை அருவாளில் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிக்க முயன்ற தம்பி கைது!
விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், புதுச்சேரி அருகே சின்ன கோட்டக்குப்பம் சத்யா நகர் பகுதியை சேர்ந்தசர் ஐயப்பன் (24). இவரது மனைவி பிரியா (23). திருமணமாகி மூன்று வயதில் ஆண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு வருடமாக பிரிந்து கூடபாக்கத்தில் உள்ள தன் தாய் வீட்டில் வாழ்ந்து வருகிறார் பிரியா.
குழந்தையை அதே பகுதியை சேர்ந்த ஐயப்பனின் சகோதரி வளர்த்து வருகிறார். ஐயப்பன் வாழ்க்கையில் விரக்தியாகி போதைக்கு அடிமையாகி வீட்டில் அடிக்கடி குடித்து விட்டு தகறாரில் ஈடுபட்டு வந்தாராம். இதற்கிடையில் புதுவை பெரிய மார்க்கெட்டில் உள்ள பூ கடையில் வேலை செய்து வரும் ஐயப்பனின் தம்பியான ஆறுமுகம்(20) என்பவரிடம் இன்று அதிகாலை 3 மணி அளவில் வாய் தகராறு ஏற்பட்டு, ஆறுமுகம் வீட்டில் இருந்த அரிவாலால் ஐயப்பனை மார்பு மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் சரமாரியாக வெட்டியதில் ஐயப்பன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
கொலை செய்துவிட்டு தப்பிக்க முயற்சி செய்த ஆறுமுகத்தை முத்தியால்பேட்டை அருகே போலிஸார் மடக்கி பிடித்து கைது செய்தனர் .இது தொடர்பாக ஐயப்பனின் தாய் அஞ்சலாட்சி புகார் அளித்ததின் பேரில் கோட்டகுப்பம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பொறுப்பு வகிக்கும் வளர்மதி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றார். மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக இரந்துபோன ஐயப்பன் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனராம் .
எஸ்.பி.சேகர்