கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பகுதியில் அம்பாள் சிட்பண்ட்ஸ், குபேரன் குலுக்கல் திட்டம், வீ.ஜே லேண்ட் புரமோட்டர்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்களின் மூலம், கடந்த 2013 முதல் 2017 வரை பல தரப்பட்ட மக்களிடம் பல கோடி கொள்ளையடிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இம்மனுவில் மனைப் பட்டா வழங்குகிறோம் என்று வாக்குறுதி கொடுத்து குலுக்கள் திட்டத்தின் மூலம் ஒரு குடும்பத்திடம் சுமார் 50 ஆயிரம் வீதமும், வீ.ஜே லேண்ட் புரமோட்டர்ஸ் மூலம் ஒரு குடும்பத்திடம் 1,20,000 ரூபாயும், சிட் பண்ட்ஸ் மூலமாக 1000 -த்திற்கும் மேற்பட்டோரிடம், பல கோடி மோசடியில் ஈடுபட்டு, நிலத்தையும் தராமலும், கட்டிய பணத்தை கேட்டால் கொலை மிரட்டல் தருவதாக பாதிக்கப்பட்டோர் மனுவில் தெரிவித்திருக்கின்றனர்.
மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, விசாரணை மேற்கொள்ளாவிட்டால், ஆதாரங்களை அழிப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதினால், விரைந்து நடவடிக்கையை வேண்டும் என்று பாதிக்கப்பட்டோர் கோரிக்கை வைக்கின்றனர்.
மேலும் இந்நிறுவனத்தில் காவல்துறையினர், வழக்கறிஞர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், கூலித் தொழிலாளிகள், வியாபாரிகள் என பல்வேறு தரப்பட்ட மக்களும் பணத்தைக் கட்டி ஏமாந்து உள்ளனர் என்று கூறப்படுகிறது.