கடலூர் : நீட் தேர்வை எதிர்த்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்
நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த அரியலூர் மாவட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு அளிக்க கோரியும் கடலூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம் திரு கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி மாணவர்கள் 2000-த்துக்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து போராட்ட்த்தில் ஈடுபட்டனர்.
மத்திய மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். அதே போல் சிதம்பரம் அருகேயுள்ள சி.முட்லூர் அரசு கலை கல்லூரி மாணவர்கள் 1000 -க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
-சுந்தரபாண்டியன்