நெய்வேலி இரண்டாவது அனல்மின் நிலையம் அருகே உள்ளது சாம்பல் ஏரி. இப்பகுதியையொட்டி அடர்ந்த காடுகளாக இருக்கும். பகல் நேரங்களில் இப்பகுதிக்குள் மக்கள் நடமாடவே அச்சப்படுவார்கள். அதனை படுத்திக்கொண்டு இப்பகுதியில் குடிமகன்கள் தனியாகவும் நண்பர்களோடும் அவ்வப்போது வந்து மது அருந்துவது வழக்கமாக நடந்து வருகிறது. ஆள் அரவமற்ற இப்பகுதியில் காதலர்கள், கள்ளக்காதலர்கள் இப்பகுதிக்கு அவ்வப்போது படையெடுத்து வந்து செல்வார்கள்.
அப்படிப்பட்ட மர்மங்கள் நிறைந்த பகுதிக்கு தெற்கு கொள்ளிருப்பு காலனியைச் சேர்ந்த பிரகாஷ், கார்த்தி, ராஜதுரை, சதீஷ்குமார், சிவபாலன் ஆகிய ஐந்து நண்பர்கள் மது அருந்துவதற்காக மது பாட்டில்கள் அசைவ உணவு சகிதம் அப்பகுதிக்குள் சென்றனர். மது அருந்திக்கொண்டு நண்பர்கள் ஜாலியாக இருக்கும்போது இவர்கள் இருந்த பகுதி வழியே 30 வயது ஒரு இளம் பெண்ணும் ஒரு வாலிபரும் சென்றுள்ளனர். இதைப்பார்த்த போதை நண்பர்கள் அந்த பெண்ணுடன் இருந்த வாலிபரை அடித்து துரத்திவிட்டு அந்தப் பெண்ணை மிரட்டி அந்த இடத்திலேயே ஐவரும் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
பின்னர் அந்தப் பெண்ணை பற்றி விசாரணை செய்தனர். அவரது ஊருக்கு அழைத்துச் சென்று விடுவது பற்றி நண்பர்கள் மத்தியில் பெரிய விவாதம் நடந்தது. அப்போது பிரகாஷ் மட்டும் அழைத்துச் செல்வதாக மற்றவர்களிடம் கூறினார். ஆனால் மற்ற நால்வரும் அவரோடு அனுப்ப தயங்கினார்கள். இதனால் பெரும் பிரச்சனை உருவானது.
இதில் பிரகாஷ், தான் மட்டுமே அழைத்துச் செல்வேன் என கறாராக கூறியுள்ளார். இதனால் மற்ற நால்வரும் அவர் மீது கோபம் அடைந்தனர். போதை உச்சத்தில் இருந்த அனைவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டது. மற்ற நால்வரும் சேர்ந்து அவரை அங்கு கிடந்த மரக் கட்டையை எடுத்து தாக்கி உள்ளனர். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்தார் பிரகாஷ். இதை கண்டு நால்வரும் திடுக்கிட்டனர். அவரை தூக்கிக்கொண்டு மந்தார குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்குள்ள மருத்துவர்களிடம் காட்டிய போது பிரகாஷ் ஏற்கனவே இறந்து போனதாக சொன்னர்கள்.
இந்த விவகாரம் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. காவல்துறையிடம், நண்பர்கள் நால்வரும் நாங்கள் மது அருந்துவதற்காக சாம்பல் ஏறி பகுதிக்குசென்றோம். அப்போது திடீர் என சில மர்ம நபர்கள் வந்து எங்களை தாக்கி தாக்கினார்கள். அதில் பிரகாஷ் மயங்கி விழுந்தார் என்று கூறியுள்ளனர். இதையடுத்து தர்மர் போலீசார் பிரகாஷ் உடலை மருத்துவ பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே பிரகாஷை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்க கோரி அவரது உறவினர்கள் தர்மல் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். பிரகாஷ் கூட இருந்த மற்ற நான்கு நண்பர்களையும் போலீசார் தீவிரமாக விசாரித்தனர். அவர்களின் பேச்சில் முரண்பாடுகள் தெரிந்தன. இதையடுத்து போலீசாரின் விசாரணை தீவிரமடைந்தது. அப்போது பிரகாசை அடித்து கொலை செய்ததை நண்பர்கள் நால்வரும் ஒப்புக்கொண்டனர். ஏன் கொலை செய்தார்கள் என்பதை மேலும் தீவிரமாக போலீசார் விசாரித்து வந்த நேரத்தில், ஊமங்கலம் அருகே உள்ள தெற்கு வெள்ளூர் பகுதியை சேர்ந்த 30 வயது இளம்பெண் பத்மா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) தாமல் காவல் நிலையத்திற்கு வந்து மேற்படி இளைஞர்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சியான புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்தபோது அவர் கணவரை இழந்த விதவை. அவரும் அதே ஊரைச் சேர்ந்த அவரது ஆண் நண்பரும், உறவினரும் ஊருக்கு சென்று விட்டு அவ்வழியே டூவீலரில் வந்தோம். எங்களை கவனித்த இந்த இளைஞர்கள் அனைவரும் எனது ஆண் நண்பரை அடித்து துரத்திவிட்டு, தன்னை சாம்பல் ஏரிக்கு இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததனர். பின்னர் என்னை ஊருக்கு அழைத்துச் செல்வதில் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது. அதில் அவர்கள் தாக்கிக் கொண்டனர். இதை பார்த்து மிரண்டு போன நான் அங்கிருந்து உயிர்தப்பித்து ஓடினேன். எனவே என்னை சீரழித்த இவர்கள் பற்றி வெளியே சொல்லி விடுவேன் என்று என்னை கொலை கூட செய்திருப்பார்கள் என்று அப்பெண் பெண்மணி காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அப்பெண்மணியின் ஆண் நண்பரையும் காவல்துறை அழைத்து வந்து விசாரணை செய்ததில், மேற்படி சம்பவம் உறுதியாகியுள்ளது.