Skip to main content

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் முறைகேடுகள் நடப்பதாக புகார்!!

Published on 11/10/2019 | Edited on 11/10/2019

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவ வார்டில் முறைகேடுகள் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர் ஆ.வைத்தியநாதன் தலைமை அதிகாரிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
 

cuddalore issue



இது குறித்து அவர் "கடலூர் தலைமை மருத்துவமனையில் பிரசவ வார்டில் பணம் வசூலிக்கும் முறைகேடுகள் அதிகமாக உள்ளதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. ஆண் குழந்தை பிறந்தால் 500 ரூபாய் வீதமும் பெண் குழந்தை பிறந்தால் 300 ரூபாய் வீதமும் வசூலிப்பதாகவும் புகார்கள் தெரிவிக்கின்றோம். அங்கு பணி செய்யும் வாட்ச்மேன்கள் மற்றும் பணியாளர்கள் வெளியிலிருந்து வரும் நோயாளிகளிடம் அவதூறான வார்த்தைகளை பேசுவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது".


இவர் மேலும் "இது போன்ற காவலாளிகள், பணியாளர்கள் மரியாதை நிமித்தமாக நோயாளிகளிடமும் மருத்துவமனைக்கு வருபவர்களிடம் நடந்து கொள்ள அறிவுறுத்தும் படி கேட்டுக் கொள்கிறோம். ஊழியர்களுக்கு என்ன பணி சுமை இருக்கிறது என்பதை அறிந்து அவளுக்கு அறிவுறுத்தி பொதுமக்களை மன உளைச்சலுக்கு ஆளாக்காதபடி கடலூர் அரசு தலைமை மருத்துவமனை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார். 

 

சார்ந்த செய்திகள்