இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கடலூர் மாநாடு!
இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கடலூர் மாவட்ட மாநாடு விருத்தாசலத்தில் நடைபெற்றது. மாநில தலைவர் வாலண்டினா, பொதுச்செயலாளர் சுகந்தி, மாவட்ட தலைவர் மேரி உள்ளிட்ட அபலர் கலந்து கொண்டனர்.
மாநாட்டையொட்டி அரசு கலைக்கல்லூரியிலிருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் பங்கேற்ற பெண்கள் அரசு மதுக்கடைகளை மூடக்கோரியும், பெண்கள் மீதான தாக்குதலை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.
பின்னர் நடைபெற்ற மாநாட்டில் “ மத்திய மாநில அரசுகள் பொது விநியோகத்திட்டத்தில் கொண்டு வரும் மாற்றங்களால் பெரும்பாண்மை மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், மாணிய திட்டங்களை ஒழிக்கும் இந்த புதிய திட்டத்தை எதிர்த்து போராட்ட நடத்த தீர்மானிக்கப்பட்டது. மேலும் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாளர்காளுக்கு வழங்க வேண்டிய நிலுவை பாக்கியை வழங்க கோருதல், மதுக்கடைகளை மூடுதல், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மனங்கள் நிறைவேற்றப்பட்டன்.
-சுந்தரபாண்டியன்