
கடலூர் மாவட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் 521 நபர்கள். இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
விழுப்புரம் மாவட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என ஆரோவில் பகுதியில் உள்ள 340 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் 39 பேர் சிகிச்சை பெற்றனர். அவர்களில் மூன்று பேருக்கு மட்டும் அறிகுறி இருப்பதாக கருதப்பட்டது. அதில் இருவருக்கு பாதிப்பு இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. மீதி உள்ள ஒரு நபரின் பரிசோதனை பற்றிய அறிக்கை இன்னும் வரவில்லை எனக் கூறுகிறார்கள்.
மாவட்ட அமைச்சர் சண்முகம், மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் ஆகியோர் உடன் சென்று முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அதன்பிறகு விழுப்புரம் நகரில் ஏற்கனவே மாவட்ட மருத்துவமனையாக செயல்பட்டு வந்த மருத்துவமனை சமீபகாலமாக உள்ளூர் மருத்துவமனையாக செயல்பட்டு வந்தது. அதை தற்போது கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்கள் கண்டறியப்பட்டால் இங்கு கொண்டு வந்து வைத்து சிகிச்சை அளிப்பதற்காக அந்த மருத்துவமனையை தயார் படுத்தியுள்ளனர். அதையும் அதிகாரிகளுடன் கலந்து முடிவு செய்தார் அமைச்சர் சண்முகம்.