Published on 31/05/2018 | Edited on 31/05/2018
எச்.ராஜா மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் அவர் மீது வழக்கு பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக தலைவர் கலைஞர் மற்றும் அவரது மகள் கனிமொழி குறித்து டுவிட்டரில் அவதூறு கருத்து பரப்பியதால் பாஜக தேசிய தலைவர் எச். ராஜா மீது சென்னை நொளம்பூர் காவல்நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. இந்த புகாரில் ராஜா மீது வழக்கு பதிவு செய்யாததால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் மீதான விசாரணையை அடுத்து, புகாரில் முகாந்திரம் இருந்தால் எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும், முகாந்திரம் இல்லாவிட்டால் வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்றும் நொளம்பூர் காவல் ஆய்வாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.