Skip to main content

வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்று வந்தவருக்கு அதிர்ச்சி-சிசிடிவியால் சிக்கிய கொரியர் ஊழியர்

Published on 25/09/2024 | Edited on 25/09/2024
nn

ஈரோட்டில் நகை திருட்டில் ஈடுபட்ட கொரியர் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த நஞ்சை ஊத்துக்குளி தலைவர் நகர் 2 -வது தளத்தில் வசித்து வருபவர் மதன் (31). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவிக்கு திருச்செங்கோட்டில் வளைகாப்பு விழா நடந்தது. வளைகாப்பு விழாவில் பங்கேற்ற மதன் மீண்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த  இரு தங்க வளையல்கள், தங்க நெக்லஸ் என 9 பவுன் நகை திருட்டு போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இந்த திருட்டு வழக்கு தொடர்பாக 46 புதூர் நொச்சி பாளையத்தை சேர்ந்த அருண் (26) கொரியர் ஊழியரை கைது செய்தனர். போலீசாரிடம் அருண் கூறும் போது,  பங்குச் சந்தையில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட திருட்டில் ஈடுபட்டதாக தெரிவித்தார். அவரிடமிருந்து 9 பவுன் நகை, மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சார்ந்த செய்திகள்