Skip to main content

ஊழல் மகாராணி ஜெயலலிதாவும் முத்தமிழ் அறிஞர் கலைஞரும் ஒன்றா..? கடம்பூர் ராஜூவுக்கு தி.மு.க. இளைஞர் அணி எச்சரிக்கை..!!!

Published on 19/09/2018 | Edited on 19/09/2018

 
தி.மு.க.விலுள்ள கடைசித் தொண்டனின் கால்செருப்புக்கு சமம்.!  முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களையும், ஊழல் மகாராணி ஜெயலலிதாவையும் ஒன்றாக ஒப்பிடுவது சரித்திரப்பிழை என்பதை மங்குனி அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்கள் இனியாவது புரிந்து கொள்ளவேண்டும் என தி.மு.க. மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் எஸ்.ஜோயல் தனது அறிக்கையில் எச்சரிக்க, தூத்துக்குடி மாவட்ட அரசியலில் பரப்பரப்புத் தொற்றியுள்ளது.

 

 

dmk

 

அவர் வெளியிட்ட அறிக்கையிலிருந்து.,   " தமிழகத்தில் ஐந்துமுறை முதல்-அமைச்சராக இருந்து பேரறிஞர் அண்ணாவின் வழியில், பொற்கால ஆட்சி தந்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள். தமிழுக்காகவும், தமிழ்நாட்டு மக்களுக்காகவும் தன்னை தந்து, உழைத்த உத்தம தலைவர் கலைஞர் அவர்கள். கலைஞர் அவர்கள் வயது முதிர்வால் மரணம் அடைந்த பிறகு அவரது உடலை மெரீனா கடற்கரையில் அடக்கம் செய்வதற்கு எங்கள் தலைவரும், கலைஞர் அவர்களின் தவப்புதல்வருமான மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை தகுதி பார்க்காமல் நேரில் போய் சந்தித்து வேண்டுகோள் வைத்தார்.

 

முதுகெலும்பு இல்லாத மோடியின் அடிப்பொடியான தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அந்த வேண்டுகோளை நிராகரித்த காரணத்தினால் நாங்கள் உயர் நீதிமன்றத்தை நாடினோம். ''மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் கலைஞருக்கு மெரீனா கடற்கரையில் இடம் வழங்கவேண்டும்'' என்று இந்த அரசின் கன்னத்தில் அறைந்தார் போன்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.  நீதிமன்றத்தின் உத்தரவிற்கு பிறகு மெரீனா கடற்கரையில் பேரறிஞர் அண்ணாவின் சமாதி அருகில், மறைந்த எங்கள் மாபெரும் தலைவர் கலைஞர் அவர்களது உடல், அவர் தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் என்ற முறையில்  முறைப்படி முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

 

 

மெரீனா கடற்கரையில் அடக்கம் செய்வதற்கும், அரசு மரியாதை செய்வதற்கும் முழுத்தகுதி உடையவர் திமுக தலைவர் கலைஞர் அவர்கள் என்பதை இந்த நாடே அறியும். மறைந்த  உங்கள் தலைவி ''ஊழல் ராணி'' ஜெயலலிதா போன்று உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒரு குற்றவாளி இல்லை எங்கள் தலைவர் கலைஞர் அவர்கள். முத்தமிழ் அறிஞர் என்று உலக நாடுகளே போற்றிய உத்தம தலைவர் கலைஞர் அவர்களுக்கு மெரீனாவில் வழங்கப்பட்ட இடம் இந்த அரசு போட்ட பிச்சை என்றால், ஊழல் மகாராணி என்று உலகமே அறிந்த ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட இடம் எந்த வகையில் போடப்பட்ட பிச்சை என்பதை அமைச்சர் கட்டிங் ராஜூ அவர்கள் தான் விளக்கவேண்டும்.

 

''செக்குக்கும், சிவலிங்கத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் நக்குகிற நாயைப்போல முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களையும், ஊழல் மகாராணி ஜெயலலிதாவையும் ஒன்றாக ஒப்பிடுவது சரித்திரப்பிழை என்பதை மங்குனி அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்கள் இனியாவது புரிந்து கொள்ளவேண்டும். உலக மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கு மெரீனாவில் இடம் கொடுத்து விடக்கூடாது என்பதில் வன்மமாகவும், வக்கிரமாகவும் இருந்த இந்த மானம் கெட்ட ஊழல் அரசை கண்டித்து உணர்த்தும் வகையில் கழகத்தலைவர் மாண்புமிகு., தளபதியாரின் பெரும் முயற்சியால் உயர் நீதிமன்றம் தலைவர் கலைஞர் அவர்களுக்கு மெரீனாவில் இடம் வழங்கி உத்தரவிட்டது.

 

 

பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிகளான கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதற்கேற்ப மக்களுக்காவே பணியாற்றிய தலைவர் கலைஞர் அவர்களின் உழைப்பு, தியாகம், பொறுப்புணர்வு, தமிழகத்தின் வளர்ச்சிக்காக அவர் நிறைவேற்றிய திட்டங்கள் இவற்றையெல்லாம் அறிந்து உயர் நீதிமன்றம் தலைவர் கலைஞர் அவர்களுக்கு மெரீனாவில் இடம் கொடுக்க உத்தரவு வழங்கியதை இந்த நாடே அறியும்.

 

 

தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் பதவியை பறித்து, கூவத்தூரில் கூத்தடித்து, சசிகலாவின் காலை நக்கி, கொல்லைப்புறம் வழியாக ஆட்சிக்கு வந்த அறிவுகெட்ட எடப்பாடி பழனிச்சாமி அரசு எழுப்பிய தடைகளை எல்லாம் தகர்த்து எறிந்துவிட்டார் எங்கள் தலைவர் மாண்புமிகு., தளபதி அவர்கள். இதனை அமைச்சர் கமிஷன் ராஜூ அவர்கள் இனியாவது புரிந்து கொள்ளவேண்டியது மிகவும் அவசியமாகும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்