தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தின் வாக்காளர்கள் வரைவு பட்டியலை அண்மையில் வெளியிட்டது தமிழக தேர்தல் ஆணையம். வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் இருப்பதாக அரசியல் கட்சிகளிடத்தின் குற்றச்சாடுகள் எழுந்தன. இந்த நிலையில், இது குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாஹூ.
புகைப்படம் திருத்தப்பணியை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் மூன்றுக்கும் மேற்பட்ட முறை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், அதுகுறித்து அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களுடனான கூட்டங்களை நடத்தி அவர்களின் கருத்துகளையும் கேட்டறிய வேண்டும் என்றும், அவர்கள் கூறும் புகார்களை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அதன் பிறகே அது குறித்து ரிப்போர்ட்டினை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கேட்டுக்கொண்டிருக்கிறார் சத்யபிரதா சாஹூ.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்பார்வையிடும் பார்வையாளர்களாக அதுல் ஆனந்த், ஜோதி நிர்மலா, சிஜிதாமஸ், கிர்லோஸ்குமார், சண்முகம், வள்ளலார், சஜ்ஜன்சிங், ஆப்ரகாம், சிவசண்முகராஜா, கருணாகரன் உள்ளிட்ட 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருகிறார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் தமிழக மாவட்டங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன.