கரோனா நிவாரண நிதியின் இரண்டாவது தவணையான ரூபாய் 2,000 ரேஷனில் வழங்கும் திட்டத்தையும், கரோனா நிவாரண உதவியாக 14 மளிகைப் பொருட்களை வழங்கும் திட்டத்தையும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (03/06/2021) தொடங்கிவைக்கிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் விழாவில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
14 மளிகைப் பொருட்கள் என்னென்ன? என்பது குறித்துப் பார்ப்போம்!
1. கோதுமை மாவு - 1 கிலோ,
2. உப்பு - 1 கிலோ,
3. ரவை - 1 கிலோ,
4. உளுத்தம் பருப்பு - 1/2 கிலோ,
5. சர்க்கரை - 1/2 கிலோ,
6. புளி - 1/4 கிலோ,
7. கடலை பருப்பு - 1/4 கிலோ,
8. கடுகு - 100 கிராம்,
9. சீரகம் - 100 கிராம்,
10. மிளகாய் தூள் - 100 கிராம்,
11. மஞ்சள் தூள் - 100 கிராம்,
12. டீ தூள் இரண்டு பாக்கெட் - 100 கிராம்,
13. குளியல் சோப்பு - 1 (125 கிராம்),
14. துணி சோப்பு - 1 (250 கிராம்).
தமிழகத்தில் உள்ள 2.11 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மளிகைப் பொருட்கள் வழங்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.