தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள் நாளை (01/09/2020) முதல் திறக்கப்படும் நிலையில், அனைத்து வழிபாட்டுத்தலங்களுக்கான நெறிமுறைகள் குறித்த அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.
அதன்படி, "வழிபாடு செய்ய வருவோர் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் வழிகாட்டுத் தலங்களை திறக்க அனுமதி இல்லை. வழிபாட்டுத் தலங்களில் வழிகாட்டின்போது 6 அடி தனிமனித இடைவெளி பின்பற்றப்பட வேண்டும். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 10 வயதுக்கு கீழ் உள்ள சிறார்கள், கர்ப்பிணிகள் வழிபாட்டுத்தலங்களுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்களில் இரவு 08.00 மணி வரை பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்படுவர். வழிபாட்டு தலங்களில் சிலைகள், சிற்பங்கள், புனித நூல்களை பக்தர்கள் தொட அனுமதிக்கக்கூடாது. வழிபாட்டு தலங்களை அடிக்கடி கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்" இவ்வாறு அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.