திண்டுக்கல் மாவட்டத்தில் அமைய நாயக்கனூர், ஆயக்குடி, அய்யலூர், அகரம், அய்யம்பாளையம், பாலசமுத்திரம்,வத்தலக்குண்டு, சின்னாளபட்டி, எரியோடு, கன்னிவாடி கீரனூர், நத்தம், நிலக்கோட்டை, ஆலமரத்துப்பட்டி, அணைக்காடு, பட்டி வீரன்பட்டி, சேவகம் பட்டி, சித்தையன்கோட்டை. ஸ்ரீராமபுரம், தாடிக்கொம்பு, வடமதுரை, வேடசந்தூர் என 23 பேருராட்சிகள் உள்ளன.
இதில் அகரம் பேரூராட்சியில்- அன்னலட்சுமி, அம்மையநாயக்கனூர்- பூங்கொடி, பட்டிவீரன்பட்டி- உமாசுந்தரி, சின்னாளபட்டி- கலையரசி, கன்னிவாடி- பாண்டீஸ்வரி, கீரனூரில்- ஈஸ்வரி, நெய்ககாரப்பட்டி- தாமரை, பாளையம்- ராஜலட்சுமி, ஸ்ரீராமபுரம்- சந்தானம்மாள் உள்பட 11-பேரூராட்சிகளில் பெண்கள் செயல் அலுவலர்களாக இருந்து வருகிறார்கள்.
இவர்களில் சிலர் சம்மந்தப்பட்ட பகுதிகளிலேயே வசிக்கிறார்கள். ஆனால் பெரும்பாலனோர் தினசரி 50 கிலோமீட்டர் முதல் 70 கிலோ மீட்டர் வரை பயணம் செய்து தாங்கள் பணி புரியும் பேரூராட்சிகளில் உள்ள பொது மக்களுக்கு கரோனா பரவாமல் தடுக்க இரவு, பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர்.
ஒவ்வொரு நாளும் அரசின் உத்தரவுப் படி, இவர்கள் கரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு வருவது பாராட்டுக்குரியது.இரண்டு அல்லது நான்கு சக்கர வாகனம் மூலம் அதிகாலையில் தாங்கள் பணிபுரியும் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்து துப்புரவு பணியாளர்களுக்கான பகுதிகளை ஒதுக்கி சுத்தம் செய்ய சொல்வதும், கரோனா வைரஸ் பரவாமல் இருக்க ஒவ்வொரு பகுதிக்கும் போய் கிருமிநாசினி தெளிக்க பணியாளர்களை அறிவுறுத்துகிறார்கள்.